சானா: அல்கொய்தா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை அடுத்து ஏமனில் உள்ள அமெரிக்க, இங்கிலாந்து நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன.
ஏமன் நாட்டில் அல் கொய்தாவினரின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இடங்களில் அல் கொய்தாவினர் தங்களது முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இங்கு செலவு குறைவு என்பதால் உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபி மொழி கற்பதற்காக வருகின்றனர். ஆனால் அல் கொய்தா தொடர்புகளுக்காகவே பலரும் வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் பிடிபட்ட தீவிரவாதி அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவன் என அமெரிக்க புலனாய்வுத் துறை வலுவாக சந்தேகிக்கிறது. குறிப்பாக ஏமனில் இருந்துதான் சதிதிட்டங்கள் தீட்டப்பட்டதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.
கடந்த 31ம் தேதி ஏமனில் உள்ள அமெரிக்கர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுப்பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் ஏமனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா நேற்று மூடிவிட்டது. அதே போல இங்கிலாந்தம் தூதரகத்தை முடியுள்ளது.
Source: thatstamil.in
No comments:
Post a Comment