சென்னை: 2010ம் ஆண்டில் சென்னை [^] போக்குவரத்தை நவீனமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேகமாக போகும் வாகனங்களைக் கண்டுபிடிக்க ரேடார்கள் வரவுள்ளன என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தி [^]யாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். 3.2 லட்சம் வாகனங்கள் உள்ளன.
2850 கி.மீ சாலையும், 44 கி.மீ கடற்பரை பகுதியும் உள்ளது. சென்ட்ரல் எழும்பூர் உள்பட 39 ரயில் நிலையங்களும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு உள்பட 53 பஸ் நிலையங்களும் உள்ளன.
இந்த ஆண்டு நவம்பர் வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 158 வழக்குகள் பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1123 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 75 சதவீதத்திற்கு மேல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. போக்குவரத்தை சீரமைக்க கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டில் மேலும் 40 சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், புதிய தலைமை செயலகம் சுற்றி 26 சந்திப்புகளில் நவீன போக்குவரத்து முறையை அமல்படுத்துதல் மற்றும் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிப்பதற்காக ரேடார்கள் வாங்குதல் போன்ற திட்டங்கள் உள்ளன.
கடன் அட்டை மோசடியை கட்டுப்படுத்தவும், மற்றும் கணினி வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Source:thatstamil.in
No comments:
Post a Comment