Friday, January 1, 2010

குறைந்து வரும் மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை

கோலாலம்பூர்: மலேசியா [^]வில் வாழும் இந்திய வம்சவாளியினரின் (பெரும்பாலும் தமிழர்கள்தான்) எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் மலேசியாவில் தமிழர்களின் எண்ணிக்கை அடியோடு காணாமல் போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளார் மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் பாலதருமலிங்கம்.

இதுகுறித்து தமிழ்நேசன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் இந்தியர்கள் குறைந்த அளவிலான குழந்தைகளையே விரும்புகிறார்கள். அதிக குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.

ஒன்று அல்லது 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பூண்டோடு அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்றார் பாலதருமலிங்கம்.

மலேசிய மக்கள் தொகையில், மூன்று முக்கிய இனப் பிரிவுகள்தான் மேலோங்கியுள்ளன. பெரும்பான்மைப் பிரிவாக மலாய் மக்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் சீனர்கள் (25 சதவீதம்) உள்ளனர். 3வது இடத்தில் வம்சாவளி இந்தியர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்களே.

Source:thatstamil.in

No comments:

Post a Comment