Wednesday, December 30, 2009

ஜன 1 முதல் நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

நெல்லை: நெல்லை [^] மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை [^] வருகிற ஜன 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கலெக்டர் ஜெயராமன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,

நெல்லை மாவட்டத்தில் ஜன 1ம் தேதி முதல் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள், மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பை, கப் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

20 மைக்ரான் வரையிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது. அதே நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பொதுவான தடை இல்லை. நெல்லை மாவட்டத்தில் 5 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே உள்ளதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த 5 தொழிற்சாலைகளிலும் உற்பத்தி இழப்பு ஏற்படாத வகையில் பேப்பர் கப், பை உற்பத்தி செய்யவும், அதற்காக வங்கி கடன் பெற்று தரவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை நெல்லை மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதே போல் தாமிரபரணி ஆற்றிலும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க பொதுமக்கள் ஓத்துழைப்பு அவசியம். பிளாஸ்டிக் இல்லாத சுற்று சூழல், மசாற்ற நகரமாக நெல்லையை உருவாக்க பொதுமக்களும், சபதம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.

Source:thatstamil.in

No comments:

Post a Comment